Homeபிற செய்திகள்மைலாப்பூரில் ஞாயிறு இசை கச்சேரி

மைலாப்பூரில் ஞாயிறு இசை கச்சேரி

சென்னை மைலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் 2024 ஜுன் 2 ஞாயிறன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறவிருக்கும் ஜுன் மாதத்திற்கான ஞாயிறு கச்சேரி நிகழ்வில் கர்நாடக வாய்ப்பாட்டு கச்சேரி நடைபெறவிருக்கிறது.

இதை வளர்ந்து வரும் பாடகரான அத்வைத் கார்த்திக் கிருஷ்ணன் வழங்குகிறார். அத்வைத் கார்த்திக் கிருஷ்ணன், மஹிந்திரா வேர்ல்டு ஸ்கூலில் 9வது வகுப்பில் கல்வி பயின்று வருகிறார். மீரா முரளி அவர்களிடம் கர்நாடக இசையை முறைப்படி முனைப்புடன் இவர் கற்று வருகிறார்.

ஒலிபெருக்கி சாதனத்தின் உதவி இல்லாமல், பூங்காவின் இயற்கையான, ரம்மியமான சுற்றுப்புற சூழலில் நடைபெறவிருக்கும் இந்த வாய்ப்பாட்டு கச்சேரியில் அத்வைத் கார்த்திக் கிருஷ்ணனுக்கு வயலினில் மீனா லோச்சனியும் மற்றும் மிருதங்கத்தில் P. ஆகாஷ் குமாரும் பங்களிப்பை வழங்கவிருக்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img