fbpx
Homeபிற செய்திகள்பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விமான பயணம் ஏற்பாடு

பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விமான பயணம் ஏற்பாடு

கிருஸ்ணகிரி மாவட்ட ஊத்தங்கரை அடுத்த மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு வெளிவந்த 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற 21 மாணவிகளை மத்தூர் அரசு பள்ளியில் இருந்து பேருந்தின் மூலம் பெங்களூர் விமான நிலை யத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து விமான மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்ல அப்பள்ளியில் பணிபுரியும் அரசு ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்லும் மாணவிகள் சென்னையில் உள்ள எஸ்எம் சாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் சென்று அங்கு பார்வையிட்டு குறிப்பு எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் தந்தை பெரியார் அறிவியல் மையத்திற்கு செல்கின்றனர்.

அங்குள்ள ஆராய்ச்சியாளர்களிடம் கலந்துரையாடி அங்குள்ள ஆராய்ச்சியாளர்களின் அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்து குறிப்பு எடுத்துக் கொள்ள உள்ளனர்.

இந்த ஆண்டு வெளி வந்த பொதுத்தேர்வு முடிவு களில் 12ம் வகுப்பில் 97 சதவீதமும், பத்தாம் மற்றும் 11ம் வகுப்பில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

இது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img