பிரபல நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் சார்பில் ஏப்ரல் ஞாயிறு கச்சேரி நிகழ்வு நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைபெற்றது. இதில் இசை ரசிகர்கள் திரளாக பங்கேற்று பார்வையிட்டனர். குமாரி ஸ்ரீகிருதி சேஷாத்ரி இந்நிகழ்வில் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வசீகரித்தார்.
வயலினில் நவீன், மிருதங்கத்தில் சாய் அரவிந்த் ஆகியோரின் பங்களிப்பில் “தெளிசி ராமா” மற்றும் “சரஸ்வதி நன்னெபுடு” போன்ற பாடல்களை அற்புதமாக பாடி தனது அபார திறனையும், இசை அறிவையும் நேர்த்தியாக ஸ்ரீகிருதி வெளிப்படுத்தினார்.
இந்த வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நெடுகிலும் இசையின் நேர்த்தியால் மெய்மறந்த ரசிகர்கள் அடிக்கடி தங்களது கைதட்டல் மூலம் குமாரி. ஸ்ரீகிருதியை பாராட்டினர்.
இந்த இசை நிகழ்ச்சியின் இறுதியில் குமாரி ஸ்ரீகிருதி சேஷாத்ரி மற்றும் வயலின் மற்றும் மிருதங்க இசைக்கலைஞர்களுக்கு சுந்தரம் பைனான்ஸ் குழுமத்தின் முதுநிலை அதிகாரி N. ஸ்ரீராமன் நற்சான்றிதழ்களையும், நினைவுப்பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.