நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திறந்த வாகனத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும்,திரைப்பட நடிகையுமான நமீதா நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: உயிர் பயத்தில் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக்கிடந்த கொரோனா காலத்தில் இந்தியா என்னவாகும் என உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் குறுகிய காலத்தில் அதற்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து நம் நாட்டு மக்களை காப்பாற்றியவர் விஷ்வ குரு பாரத பிரதமர் மோடி.
நமக்கு மட்டுமல்ல உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக அனுப்பினார்.நமது தமிழ் மண்ணையும், கலாச்சாரத்தையும் காப்பவர் மோடி. தமிழ கத்தின் செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைத்தவர் மோடி.
ஆதலால், பண்பான பாஜக வேட்பாளர் எல். முருகனுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் தாமரை மலரும். தமிழகம் வளரும் என பஞ்ச் டயலாக் பேசி தனது உரையை முடித்தார்.
நடிகை நமீதா பிரச்சாரத்தின் போது பாஜக கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா,நகர தலைவர் உமாசங்கர், மாவட்ட துணைத்தலைவர் கலைவாணி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.