fbpx
Homeபிற செய்திகள்கோடை கால பயிற்சி முகாம்

கோடை கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 29.04.2024 முதல் 13.05.2024 வரை கோடை கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். தடகளம், கபடி. கைப்பந்து, மல்லர்கம்பம், வாலிபால், ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ/மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும் மாலை 4.00 மணி முதல் 6.30 வரையும் பயிற்சியளிக்கப்படும்.

மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தினமும் ஊட்டச் சத்து வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுபவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.170+GST 30 = ரூ.200 ஆகும். கட்டண தொகையினை மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் POS Machine 60 G pay, Phone pay, Credit Card, Debit card UPI வேண்டும்.கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் பெயர்களை தங்கள் பயிற்சி முகாம் நடைபெறும் இடத்தில் நேரடியாக விளையாட்டரங்கம், அரசு கலைகல்லூரி அருகில் கீழ்பெரும்பாக்கம், முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8754744060, 6381799370 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட

எனவே இந்த கோடை கால பயிற்சி முகாமில் பெருமளவில் மாணவ/ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வியைாட்டு திறனை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்சி.பழனி, தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img