fbpx
Homeபிற செய்திகள்கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கோவை குற்றவியல்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2024 மற்றும் 2025 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

அதில் தலைவராக ஐயப்பன், துணை தலைவராக ரமேஷ், செயலாளராக ஷீலா ராஜு, இணைச் செயலாளராக கலைவாணி, பொருளாளராக கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்றனர்
செயற்குழு உறுப்பினர்களாக கீதா ஜெய் சூர்யா சாந்தி நாராயணன் சித்தார் அப்துல்லத்தீப் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டநிர்வாகிகள் அனைவரும் நேற்று மாலைஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டாரங்கில் பதவி ஏற்று கொண்டனர்.

இதுகுறித்து புதிதாக பதவி ஏற்று கொண்ட தலைவர் ஐயப்பன், செயலாளர் ஷிலா ராஜூ, பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூறும் போது , “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் வழக்கறிஞர்கள் நலனுக்காக பாடுபடுவோம் என்று கூறினார்கள்

படிக்க வேண்டும்

spot_img