fbpx
Homeபிற செய்திகள்ஏர் கொமடோர் விவர்த் சிங் சூலூர் விமானப்படை நிலைய தலைமை பொறுப்பை ஏற்றார்

ஏர் கொமடோர் விவர்த் சிங் சூலூர் விமானப்படை நிலைய தலைமை பொறுப்பை ஏற்றார்

சூலூர் விமானப்படை நிலைய தலைமை பொறுப்பை ஏர் கொமடோர் விவர்த் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜூன் 1995 இல் இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்ட இந்த விமான அதிகாரி ஒரு விமானிகள் பயிற்றுவிப்பாளரும் ஆவார். 4,000 மணி நேரத்திற்கும் மேலாக இந்திய விமானப்படை விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர், ஒரு சோதனை விமானி ஆவார். போர் விமானங்கள், போக்குவரத்து மற்றும் பயிற்சி விமானங்களின் பல வகைகளை இயக்கிய அனுபவம் இவருக்கு உண்டு.
கடக்வாஸ்லாவில் உள்ள புகழ்பெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் (DSSC) முன்னாள் மாணவர்.

ஏர் கொமடோர் விவர்த் சிங் அவர்களுக்கு இந்திய விமானப்படையின் முதன்மையான ஒரு  போர் படைப்பிரிவின் தலைவராக இருந்த அனுபவமும் உண்டு. டெல்லி விமான தலைமையகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.விமானங்களின் சோதனை விமானியாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ் (Tejas) விமானத் தயாரிப்பில் முக்கிய பங்காற்ற்றியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img