ஈரோடு புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாள் சிந்தனை அரங்க நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்றது. தி சென்னை சில்க்ஸ் & ஸ்ரீ குமரன் தங்க மாளிகை மேலாண்மை இயக்குநர் கே.விநாயகம் தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் முன் னிலை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.
‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற தலைப்பில் தமிழறிஞர் சுகி.சிவம் சிறப்புரை நிகழ்த்தினார்.



