கோவை கிரெடாய் அமைப்பின் சார்பில் “பேர் புரோ 2025” ப்ரொபர்ட்டி எக்ஸ்போ. இந்த வருடம் ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் கோவை கொடிசியா ஹால் E-யில் நடைபெற உள்ளது.
இது குறித்து கிரெடாய் கோவை அமைப்பின் தலைவர் எஸ். ஆர். அரவிந்த் குமார் கூறியதாவது:
கோவையில் சொந்த வீடுகள் வாங்க விருப்பப்படும் மக்களுக்கு இந்த ப்ரொ பர்ட்டி எக்ஸ்போ சிறந்த வாய்ப்பாக அமையும். இந்தக் கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி டெவலப்பர்கள் பங்கேற்கின்றனர். இதில், 100க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இந்தக் கண்காட்சியில் டெவலப்பர்களைத் தவிர முன்னணி வங்கிகள் பங்கேற்கின்றனர். இந்த வங்கிகள் மக்களுக்கு தேவையான வீட்டுவசதி கடனை வழங்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி குறித்து ஃபேர் புரோ 2025 கண் காட்சி தலைவர் சுரேந்தர் விட்டல் பேசியதாவது:
அடுக்குமாடி குடியிருப்பு கள், வில்லாக்கள், சீனியர் லிவிங் யூனிட்கள், பிளாட்கள் மற்றும் கேட் டட் கம்யூனிட்டிகள் உள்ளிட்ட சொத்துகள் இங்கு காட்சிக்கு வைக்கப் படுகின்றன. ரூ. 20 லட்சம் முதல் ரூ. 7 கோடி வரை யிலான விலைகளில் சொத் துகள் விற்பனைக்காக காட் சிப்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, ஜெ. எல்.எல்.நிறுவனம், கோவை ரியல் எஸ்டேட் சந்தை தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிட வுள்ளது.
கிரெடாய் கோவை செயலாளர் சஞ்சனா விஜய்குமார் கூறியதாவது:
கடந்த ஆண்டு கோவை யில் புதிய வீட்டு திட்டங்கள் 52 சதம் அதிகரித்துள்ளன. மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம், மேற்கு பைபாஸ் சாலை ஆகியவற்றால் கோவையின் வளர்ச்சி மிக வேகமாக நடக்கிறது. இவ்வாறு அவர் பேசி னார்.
இதில் பொருளாளர் கார்த்திக் குமார் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உதவி பொது மேலாளர் பிரவீன், ப்ரொ பெர்ட்டி எக்ஸ் போவில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்களை விளக்கினர்.
இந்த ப்ரொபெர்ட்டி எக்ஸ்போ தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொது மக்களுக்காக திறந்திருக்கும்.



