கரும்பு விஞ்ஞானிகள், கோ 0238 போன்ற அதிசய கரும்பு ரகங்களை உருவாக்கி நாட்டின் சர்க்கரை மற்றும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டும் என இந்திய வேளாண் ஆராய்ச் சிக் கழகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் (பயிர் அறிவியல்) முனைவர் டி.ஆர்.சர்மா கூறினார்.
கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத் தில், “கரும்பு உற்பத்தியில் ஆராய்ச்சி மற்றும் தொழில் துறையின் பார்வை” என்ற தலைப்பில் கருத்துதிர்ப்பு (Brainstorming) அமர்வு நடந்தது.
இதனை துவக்கி வைத்துப் அவர் பேசும் போது, கரும்பு விஞ்ஞானிகள், அதிக நீர் பயன்பாடு மற்றும் ஊட்டச்சத்து பயன்பாட்டு திறன் கொண்ட காலநிலை மாற்றத்தினை தாங்கும் ரகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிறுவனத்தின் விரிவாக்க வெளியீடுகளை அவர் வெளியிட்டார்.
வட இந்தியாவில் 70% க்கும் மேற்பட்ட கரும்புப் பரப்பை ஆக்கிரமித்துள்ள ‘சிஷீ 0238’ என்ற கரும்பு ரகத்தினை உருவாக்கி, இவ்வருடம் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பத்மஸ்ரீ விரு தைப் பெற்ற கரும்பு இனப்பெருக்கு நிறுவனத் ன் முன்னாள் இயக்குநர் முனைவர் பக்ஷி ராம்-க்கு பல்வேறு நிறுவனங்களின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
பக்ஷி ராம் பேசும்போது, சுய-சார்பு இந்தியாவிற்கான சர்க்கரை மற்றும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கரும்பு ரகங்களின் தேவைகள் குறித்து விவரித்தார்.
சக்தி சர்க்கரை ஆலையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.மாணிக்கம், பேசுகையில், இந்திய சர்க்கரைத் துறையில் நீண்ட கால கொள்கைகளை உரு வாக்குவதின் அவசியத்தை வலியுறுத்தினார். உணவுப் பயிர்களை மட்டுமே பயிரிட விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படும் சீனாவின் கொள்கையினை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், மத்திய அரசின் , சமீபத்திய ‘உயிரி எரிபொருளுக்கான தேசியக் கொள்கை’யானது இந்திய கரும்பு விவசாயிகளுக்கு உதவுவதாக தெரிவித்தார் .
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் உதவி இயக்குநர் ஜெனரல் (பணப் பயிர்கள்) முனைவர் ஆர் கே சிங், உதவி இயக்குநர் ஜெனரல் (விதைகள்) டி.கே.யாதவா பேசுகையில், விவசாய ஆராய்ச்சியில், தனியாருடனான கூட்டு முயற்சி அணுகுமுறையை கடைப்பிடிப்பதன் முக் கியத்துவத்தையும், கரும்பு விவசாயிகளின் வருமானம் உயர்ந்திட தரமான விதைக் கரணைகள் எவ்வாறு உதவும் என்பதனையும் எடுத்துரைத்தனர் .
இயந்திரமயமாக்கல்
லக்னோ இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் இரா.விஸ்வநாதன், கரும்புப் பயிரில் நோய் மேலாண்மை குறித்தும், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் துணைத் தலைவரும் கோத்தாரி சர்க்கரை ஆலை யின் இயக்குநருமான எம்.சில்வெஸ்டர் சர்க் கரைத் தொழில் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் இயந்திரமயமாக்கல் குறித்தும் பேசினர்.
கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத் தின் இயக்குநர் முனைவர் கோ ஹேமப்ரபா, கருத் துதிர்ப்பு அமர்வின் உப தலைவராக உரை யாற்றுகையில், கோ 0238 ரகத்தின் மூலம் நாட்டின் கரும்பு உற்பத்தி ஹெக்டருக்கு ஏறத்தாழ 84 டன்களை எட்டிவிட்டதாக குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தியை மேம்படுத்துவதில் சர்க்கரை ஆலைப் பணியாளர்களின் பங்கினையும் அவர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பரிந்துரைகள் பட்டியலிடப்பட்டு வல்லுனர் குழுவினால் விவாதிக்கப்பட்டது.
முதன்மை விஞ்ஞானியும் விரிவாக்கப்பிரிவின் தலைவருமான முனைவர் து.புத்திர பிரதாப் அமர்வின் அறிக்கையாளராக செயல்பட்டு கருத்துதிர்ப்பு நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.



