fbpx
Homeபிற செய்திகள்மதுக்கரை அருகே புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி கோவையில் போக்குவரத்து மாற்றம்: மாநகராட்சி ஆணையர்...

மதுக்கரை அருகே புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி கோவையில் போக்குவரத்து மாற்றம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்கு உட்பட்ட பிள்ளையார்புரம் பகு தியில் மதுக்கரை முதல் சுகுணாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தரைமட்ட பாலத்திற்கு மாற்றாக புதிய உயர்மட்ட பாலம் கட்டுமானம் துவங்க உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: மதுக்கரை முதல் சுகுணாபுரம் செல் லும் சாலையில் புதிய உயர்மட்ட பாலம் கட் டுவதற்கு மாநகராட்சி யில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தற்போது பணிகள் துவங்க உள்ளன.

பாலம் கட்டுமா னப் பணிகள் நடைபெறும் போது, மாற்றுப்பாதையாக கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் பாலக்காடு பிரதான சாலை சென்றடைவதற்கு பிள்ளையார்புரம் பிரதான சாலைக்கு மாற்றாக இடை யர்பாளையம் பிரதான சாலை, எம்.ஜி.ஆர்.நகர் பிரதான சாலை, சி.டி.ஓ.காலனி ஆகிய சாலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மட்டுமே பிள்ளையார்புரம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள சேவை சாலையினை பயன்படுத்திக் கொள்ள லாம்.

நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் பிள்ளையார்புரம் பிரதான சாலை, சி.டி.ஓ.காலனி ஆகிய சாலைகளை பயன் படுத்தி பாலக்காடு சாலை சென்றடையலாம்.

மழைவரும் காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி எவ்வித வாகனங்களுக்கும் பிள்ளையார்புரம் பிரதான சாலையில் செல்ல அனுமதி இல்லை. இவ் வாறு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img