எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமி டெட் மற்றும் ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட சாயர் கம்ப் ரஸர்ஸ் குரூப் ஆகியவற்றுக்கு இடை யேயான கூட்டு நிறுவனமான எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் லிமிடெட், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள கல்லப்பாளையத்தில் புதிய உற்பத்தியகத்தைத் திறந்துள்ளது.
ஏறக்குறைய 400 மில்லியன் ரூபாய் முதலீட்டில், 50,000 சதுர அடியில் ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் ஹைபிரஷர் கம்பிரஸர்கள், பிரஷர்-ரெட்யூசிங் ஸ்டேஷன்கள், மற்றும் போர்ட்டபிள் பிரீத்திங் ஏர் கம்ப் ரஸர்களை இண்டஸ்ட்ரியல், கமர் ஷியல் ஷிப்பிங், நேவல் மற்றும் ஆஃப்ஷோர் மார்கெட்டுகளுக்கு இந்தியாவில் உற்பத்திசெய்யும். இந்த உற்பத்தியகம் ஒரு இன்ஜீனியரிங் சப்போர்ட் சென்டரையும் கொண்டிருக்கும்.
இது புதிய தயாரிப்பு மேம்பாடு மற்றும் புரோட்டோடைப் சோதனைக்காக உலகெங்கிலும் உள்ள சாயர் கம்ப் ரஸர்ஸ் குழுவிற்கு பொறியியல் ஆதரவை வழங்கும்.
விழாவில் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் பேசியதாவது: 2008-ல் நிறுவப்பட்ட ELGi Sauer ஜாயிண்ட் வென்ச்சர், மேம்பட்ட தொழில்நுட்பம், உள் நாட்டுமயமாக்கல் காரணமாக கிடைக்கும் தன்மை அதிகரிப்பு ஆகி யவற்றுடன் இந்திய கடற்படை, கடல் மற்றும் தொடர்புடைய சிறப்பு பயன்பாடுகளுக்கு பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்கியுள்ளது.
14 ஆண்டுகால கூட்டாண்மை, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் அதிக போட் டித்தன்மையுடன் இருக்கவும், மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதற்கான வாய்ப்புகளுடன் ஹை-பிரஷர் சந்தையில் முக்கிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
சுறுசுறுப்பான செயல்பாடுகள், அதிகரித்த திறன், உள்ளூர் விநியோகம் ஆகியவை எங்கள் வாடிக்கையாளர்களை ஆதரிப்பதற்கு இன்றியமையாததாக இருக்கும் என்றார்.
சாயர் கம்ப்ரஸர்ஸ் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹென்ட்ரிக் மர்மன், எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் கினி ஆகியோர் பேசினர்.



