கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத் துறை மாணவர்கள், மதுரை லேடி டோக் மகளிர், கோவை இந்துஸ்தான், எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி, திருப்பூர் சசூரி, நிப்டி ஆடை வடிவமைப்பு, ஈரோடு வெங்கடேஸ்வரா கல்லூரிகள், நாமக்கல் கே.எஸ்.ஆர். கல்வி குழுமங்கள், திருச்சி காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் நடத்திய பேஷன் ஷோ மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரிகளில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல கல்லூரிகளில் ஓட்டு மொத்த சாம்பியன் பட்டம் மற்றும் ரூ62,950 ரொக்கப்பரிசினை பெற்றனர். மாணவர்களை கல்லூரி தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன், துறைத்தலைவர் மஞ்சுளா பாராட்டினர்.