சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு மாயி திரைப்படத்தின் வசனத்தை கூறி வித்தியாசமான முறையில் நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் வாக்கு சேகரித்தார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து கடைவீதி மற்றும் மார்க்கெட் பகுதியில் பிரபல நகைச்சுவை நடிகர் மாயி திரைப்படத்தின் புகழ் பாவா லட்சுமணன் வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது திரைப்படத்தின் பிரபல நகைச்சுவை வசனமான மாயி அண்ணன் வந்திருக்காக மாப்பிள்ளை மொக்க சாமி வந்து இருக்காங்க வசனத்தை வேட்பாளருக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கூறி வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து அங்கிருந்த பழக்கடைகளுக்கு சென்று பழங்களை வெட்டி கொடுத்தும் ஒவ்வொரு கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நகைச்சுவை நடிகரின் இந்த வாக்கு சேகரிப்பு அந்தப் பகுதி மக்களிடையேவும் வியாபாரிகள் இடையேவும் பெரும் வரவேற்பை பெற்றது.