fbpx
Homeபிற செய்திகள்டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க நிர்மலா மகளிர் கல்லூரி மாணவி தேர்வு

டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க நிர்மலா மகளிர் கல்லூரி மாணவி தேர்வு

இந்திய நாட்டின் 77 -வது குடியரசு தினவிழா, ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண் டாடப்படவுள்ளது. இதையொட்டி டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதற்காக முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியில் இளநிலை மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி செல்வி அனாமிகா என்பவர் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர், பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறந்த மாணவராகத் தேர்வு செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து தென்னிந்திய அளவில் கேரளாவின் பாலக்காட்டில் உள்ள லீடு மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற அணிவகுப்புத் தேர்வில் பங்கேற்றுச் சிறந்த மாணவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, தமிழ்நாடு சார்பில் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளார்.

இதன்மூலம், தமிழ்நாட்டிற்கும், நிர்மலா மகளிர் கல்லூரிக்கும் பெருமை சேர்த்திருக்கும் மாணவி அனாமிகாவை, நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி மேரி பபியோலா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களான முனைவர் சகோதரி கிரேசி, முனைவர் மோகனா, முனைவர் தன்யா ஆகியோரும் பாராட்டி வாழ்த்துதலை உரித்தாக்கிக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img