fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மலையாள நடிகர் வீட்டில் கிறிஸ்துமஸ் விழா

கோவையில் மலையாள நடிகர் வீட்டில் கிறிஸ்துமஸ் விழா

மலையாளத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான பிரதீப் ஜோஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கோவை கவுண்டம்பா ளையம் பகுதியில் உள்ள மலையாளத் திரைப் பட நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான பிரதீப் ஜோஸ் வீட்டில் மலையாள நடிகர்களான ரித்து மந்த்ரா மற்றும் மலையாள சின்னத்திரை நட்சத்திர நடிகர்களுடன் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில் அமைத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆடல்,பாடல் உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பட்டது. கிறிஸ்துமஸ் விழாவில் குடும்பத்துடன் அனைவரும் கலந்து கொண்டு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினார்கள்.

அதேபோல கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடியது பொது மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பிரதீப் ஜோஸ் படக்குழு வினர் பங்கேற்று உற்சாகமடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img