ஊட்டி ஃபெர்ன் ஹில், எல்க் ஹில் மற்றும் ஆனைக்கட்டியில் உள்ள ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ்களுடன், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நேற்று (14ம் தேதி) நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயண சுவாமி, ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் கிளஸ்டர் மேலாளர் ஹெரால்டு ராபின்ஸ் ஆகியோர் கையொப்பமிட்டு, ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், “ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிபுணர்களின் ஆலோசனை பெற்று மாணவர்களுக்கு பாடத்திட்டம் வடிவமைத்தல், மாணவர்கள் ரிசார்ட்களுக்குச் செல்லுதல், பயிற்சிப் பெறுதல் மற்றும் வேலைவாய்ப்பு பெறுதல், ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ்களுடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து உணவுத் திருவிழாக்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், செயல்முறை விளக்கங்கள் அளித்தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதேபோல் இரு நிறுவனங்களும் இணைந்து நிறுவனச் சமூகப் பொறுப்புகள் (சி.எஸ்.ஆர்.) திட்டத்தினை செயல்படுத்த உள்ளன.