fbpx
Homeபிற செய்திகள்நீட் தேர்வில் 36-வது இடம்பிடித்து கோவை மாணவன் ஜேக்கப் பிவின் சாதனை

நீட் தேர்வில் 36-வது இடம்பிடித்து கோவை மாணவன் ஜேக்கப் பிவின் சாதனை

நீட் எனப்படும்மருத் துவ நுழைவுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளி யிட்டுள்ளது. அதில் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஆகாஷ் பைஜு நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவன் ஜேக்கப்பிவின் அகில இந்திய தரவரிசை பட்டியலில் 36 -வது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார். கோவையில் முதல் மதிப்பெண் பெற்றுள் ளார்.

அதே போன்று இங்கு பயின்ற மாணவர்கள் சஞ்சனா, ஸ்மிதா, வர்சினி, நவீனா, தருவ் ராம்ராஜ் ஹரிசங்கர்உள்பட நீட் தேர்வில் ஒன்பது பேர்வெற்றி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ஆகாஷ் பைஜூஸ்டெபுடி இயக்குனர் சஞ்சய் காந்தி மற்றும் நிர்வாகிகள் ஆகாஷ் சீனிவாச ரெட்டி ராம்கி ஆகியோர் கூறியதாவது:-
நடந்து முடிந்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இந்த பயிற்சி மையம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் சாதனைகளுக்கு அவர்களது கடின உழைப் பும் ஆசிரியர்களின் முறையான வழிகாட்டுதலும் பெற்றோர்கள் கொடுக்கும் ஊக்கமும் இந்த வெற்றிக்கு காரணங்களாகும்.

இந்த பயிற்சி மையத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 21 கிளைகள் உள்ளன.இங்கு திறமையான ஆசிரியர்களை கொண்டு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்கப்படு கிறது. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img