fbpx
Homeபிற செய்திகள்கோவை மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் மாநில மகளிர் ஆணையத் தலைவர்...

கோவை மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி உறுதி

தனியார் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என மாநில மகளிர் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று பேர் அவர்களை தாக்கி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி பாதிக் கப்பட்ட இருவரையும் சந்தித்து விசாரணை மேற் கொண்டுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள அந்த இளைஞரை சந்தித்து விசா ரணை நடத்த வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாதிக்கப் பட்ட மாணவியை சந்தித்து என்ன தேவை என் பதை எல்லாம் கேட்டு அறிந்து கொண்டேன். அந்தப் பெண்ணிடம் நீண்ட நேரம் பேசி விட்டு வந்தேன். காவல்துறையினர், சம்பந்தப்பட்ட அந்த மூன்று பேரையும் பிடித்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி நான் எந்த விஷயமும் கூற மாட்டேன். இப் போதைக்கு அந்த பெண்ணுக்கு தேவை மருத்துவம் பாதுகாப்பு மனநல ஆலோசனை தான். அதற்காக தான் நான் வந்துள்ளேன். அந்தப் பெண் அதிர்ச்சியில் தான் இருக்கிறார் அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதமாக தான் உள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும், அதில் மாற்றுக்கருத்தே கிடையாது. இது ஒரு கொடூர செயல் என்று தான் நான் கருதுவேன். இப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்கும் பொழுது அதிர்ச்சி அளிக்கிறது.
அந்தப் பெண்ணிடம் என்ன நடந்தது என்று முழுமையாக விசாரித்து உள்ளேன். அறிக்கையை தயார் செய்து வைத்துள் ளேன். அதை தவிர வேறு எதுவும் கூற முடியாது. முதல்வரும் ஒரு மாத காலத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். தற்பொழுது எல்லாம் இது போன்ற செயல்களுக்கு தண்டனை உடனடியாக வழங்கப்படுகிறது அதேபோன்று கடுமையான தண்டனை இந்த வழக்கிற்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img