மதர் பைவ்ரோஸ் டிரஸ்ட் (Mother Fiverose Trust) சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான கட்டுரை, கலை போட்டிக்கான பரிசளிப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பிரெய்லி கண்காட்சி தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம், முதன்மைக்கல்வி அலுவலர் ரா.சங்கீதா சின்னராணி, மாநில மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் மெய்கண்டன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பல மாவட்டகளில் இருந்து பார்வைற்றோர், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் IBN AL HAYTHAM BRAILLE வாழ்நாள் சாதனை விருது முனைவர் வே.சுகு மாரனுக்கு வழங்கப்பட்டது.
டிரஸ்டி டாக்டர் முகம்மது நஸிர், பிஸியோதெரபிஸ்ட் பிரெய்லி கண்காட்சி மற்றும் உலக பிரெய்லி தினத்தை பற்றி சிறப்புரையாற்றினார்.
டிரஸ்டி ஆர்க்கிடெக்ட் முகம்மது ஹயாஸ் பார்வையற்றவர்களின் தேவைகளை பற்றியும், அவர்களின் வாழ்வியலை பற்றியும் எடுத்துரைத்தார்.
வரும் கல்வியாண்டில் தூத்துக்குடியில் பார்வையற்றவர்களுக்கு பள்ளிக்கூடம் கொண்டு வர வேண்டும் என்றும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், இலவச வீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை டிரஸ்டின் சார்பாக அரசிற்கு வைக்கப் பட்டது.
மதுரை செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளிக்கு சிறந்த பள்ளிக் கான விருது கிடைத்தது.
முதல் பரிசை கோவை ராமகிருஷ்ணா மிஷன் மாணவி பரணி ஸ்ரீயும் 2ம் பரிசை மதுரை செயின்ட் ஜோசப் பள்ளி மாணவன் சிவக்குமாரும், மூன்றாம் பரிசை திருச்சி அரசு பார்வையற்றவர் பள்ளி மாணவி வனிதாவும் நான்காம் பரிசை சேலம் அரசு பார்வையற்றவர் பள்ளி மாணவர் அபினேஷ் குமாரும் பெற்றனர். சிறப்பு ஆசிரியர் ரிகானா பர்வின் நன்றி கூறினார்.



