fbpx
Homeபிற செய்திகள்மாநில அளவிலான வில் விளையாட்டுப் போட்டி

மாநில அளவிலான வில் விளையாட்டுப் போட்டி

தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கத்தின் முதலாம் ஆண்டு மாநில அளவிலான வில் விளையாட்டுப் போட்டி ஈரோட்டில் உள்ள செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வில் விளையாட்டு வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த போட்டியில் கட்டணமின்றி சிறப்பு சலுகை வழங்கப்பட்டது. இதில் வில் விளையாட்டு பிரிவுகள், துவக்க, இந்தியன், ரிகர்வு, காம்பௌண்ட், என 4 பிரிவுகளில் தனித்தனி வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

முதன்மை விருந்தினராக ஈரோடு சட்டக் கல்லூரியின் இணை செயலாளர் அருண் பாலாஜி, நந்தா கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாக அலுவலர் டாக்டர்சீனிவாசன், இந்துஸ்தான் வில் விளையாட்டு சங்கத்தின் தலைவர் மணிவாசகம், தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் மணிகண்டன், செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் சிவானந்தன், மேலும் சங்க முக்கிய நிர்வாகிகள் தமிழ்நாடு வில் விளையாட்டு இணை செயலாளர் வெங்கடேசன், ஈரோடு மாவட்ட வில்விளையாட்டு இணை செயலாளர் தமிழரசன், பாஜக இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு தலைவர் ஐயப்பன் கலந்துகொண்டனர்.

மேலும் வெற்றி பெற்ற வில் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களும் ஈரோடு சட்டக் கல்லூரி இணை செயலாளர் அருண்பாலாஜி வழங்கி பாராட்டினார்.
ஈரோடு மாவட்ட வில் விளையாட்டு சங்க தலைவரும் நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை உடற்கல்வி இயக்குனருமான தேவகாந்தன் இத்தகவலை தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img