கோவை கொடிசியா அருகில் இஸ்கான் (ஸ்ரீ ஜெகநாத் மந்திர்) கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி ஜன்மஸ்தமி – 2024 விழா வரும் 26ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
இதையொட்டி சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டு இன்று (24ம் தேதி) துவங்கியது. 26ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோவை நிர்வாக அலுவலகம் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கில் ஆண்டுக்கு 7.25 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி தரும் 444 நாட்கள் கொண்ட அமிர்த விருஷ்டி வைப்பு திட்டம், 90 சதவீதம் வரை கார் கடன், விரைவான வீட்டுக் கடன், எக்ஸ்பிரஸ் கிரெடிட் உடனடி தனிநபர் கடன், ரூ.1.5 கோடி வரை கல்விக் கடன், குறைந்த வட்டியில் நகைக்கடன், பென்சன் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள், டெபாசிட் திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல சேவைகள் குறித்தும் வங்கி அலுவலர்களால் விளக்கப்படுகிறது.
அரங்கினை அதிகளவில் பார்வையாளர்கள் பார்வையிட்டு ஸ்டேட் வங்கியின் திட்டங்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்து செல்கின்றனர்.
முன்னதாக இந்த அரங்கை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கோவை பிராந்திய அலுவலகம் (தெற்கு) பிராந்திய மேலாளர் கே.சீதாராமன் பார்வையிட்டார்.