fbpx
Homeபிற செய்திகள்தென்காசியில் காலை உணவுத்திட்டம் துவக்கம்

தென்காசியில் காலை உணவுத்திட்டம் துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரகப்பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட “முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடங்கி வைத்ததை தொடர்ந்து தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை ஊராட்சி விவேகானந்தா நடுநிலைப் பள்ளியில் ஊரகப்பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் துவக்கவிழா நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை தாங்கினார்.


இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் அவர்கள் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img