கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு நடத்தும் கைவினை பொருள் கண்காட்சி மற்றும் விற்பனைதொடக்க விழா “கிராப்ட் பஜார் 2024” என்ற பெயரில் கோவை குணா கல்யாண மண்டபத்தில் இன்று (18-ந் தேதி) தொடங்கியது
வருகிற 23 – ந் தேதிமுடிய 6 நாட்கள்நடைபெறும் இந்த கண்காட்சியை
காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொது மக்கள் இலவசமாக பார்வையிடலாம்.
இந்த கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைஞர்கள் பங்கேற்கின்றனர்
இந்த கண்காட்சியில் துணி வகைகள், கைவினை பொருட்கள்
கலை பொருட்கள்: பிச்வாய், கவாட், மதுபானி, பாட், பட்டசித்ரா, வார்லி, கோன்ட், ஓவியங்கள்
உள்பட அனைத்து மாநில கைவினைஞர்களின் கைவினைப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட தகவலை கண்காட்சி விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்