Homeபிற செய்திகள்கௌமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா

கௌமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா

கோவை கலைவாணி கல்வி நிறுவனங்களின் இணைத்தாளாளரும், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனருமான டாக்டர்.குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கோவை  கௌமார மடாலயத்தில் குருவின் பாதம் பணிந்து அவர்தம் அருளாசி பெறுவதற்காக முதன்முறையாக குரு வணக்க நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. 

இந்த குரு வணக்க நாள்விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை (21-07-24) அன்று மடாலய வளாகத்தில் நடைபெறுகிறது. 

அன்று காலை 7.00மணிமுதல் மாலை 5.00மணிவரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்  நடைபெறுகிறது.

விழாவுக்கு சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்குகிறார். விழாவில் கேஎம்சிஎச் தலைவர் டாக்டர். நல்லா பழனிச்சாமி, சிறுதுளி வனிதா மோகன், ராயல்கேர் மருத்துவமனை டாக்டர்.மாதேஸ்வரன், குமரகுரு கல்லூரி தாளாளர் சங்க வாணவராயர், செந்தில் குழுமத் தலைவர் ஆறுமுகசாமி, கொங்குநாடு மருத்துவமனை தலைவர் டாக்டர்.ராஜு, என்ஜி மருத்துவமன தலைவர் டாக்டர். மனோகரன், ரூட்ஸ் நிறுவன தலைவர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

படிக்க வேண்டும்

spot_img