தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட மன்ற உறுப்பினர் மாணிக்கம் தலைமையில் பெரிய பாலம் பகுதியில் திமுக கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் அப் பகுதி யில் உள்ள ரோசா மிஸ்டிகா மாற்றுத்திறனாளிகள் இல்லத் திற்கு சென்று அங்கு தங்கி பயின்று வரும் பள்ளி மாணவ- மாணவியருக்கு சீருடை மற்றும் உணவு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல வைகநல்லூர் பகுதியில் செயல்படும் கேண்டில் டிரஸ்ட்டில் தங்கிப் பயிலும் ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கு சீருடை மற்றும் உணவு வழங்கி எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் ஜாபருல்லா, குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, அரசு வழக்கறிஞரும் நகர அவை தலைவருமான சாகுல் அமீது, நகர பொருளாளர் தமிழரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.