டிஎச்ஆர், ஐசிஎம்ஆர் சார்பில் இரண்டு நாள் தேசிய அளவிலான பயிலரங்கம் கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. மருத்துவப் பயிற்சி, மன மற்றும் நரம்பியல் நோய்களுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி எனும் தலைப்பில் நடத்தப்பட்டது.
கல்லூரித் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி, முதல்வர் டாக்டர் எம்.அகிலா ஆகியோரின் வழிகாட் டுதலின் கீழ் இசிஇ துறை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இசிஇ துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜே.இந்திரன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை பேராசிரியர் மற்றும் இயக்குநர் டாக்டர் எம்.கதிர்வேலு தலைமை தாங்கி பேசினார்.
சிறப்பு விருந்தினர் பாலக்காடு இந்திய தொழில்நுட்பக்கழக மின் பொறியியல் துறை அசோசி யேட் பேராசிரியர் எம்.சபரிமலை மணிகண்டன் பேசும்போது, மன மற்றும் நரம்பியல் கோளாறுகளை பகுப்பாய்வு செய்வதற்கான திட்டங்களைக் கொண்டிருப்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.
டாக்டர் கே. பாலபாஸ்கர், வயது வந்தோருக்கான சுதந்திர வாழ்க்கை விரிவுரையாளர் (DAIL), எஸ்.சங்கர் சுப்பையா, ஆலோசகர் (உதவி தொழில்நுட்பம்/ ICT), டாக்டர் கமல்ராஜ் சுப்பிரமணியம், பேராசிரியர் மற்றும் தலைவர், பயோமெடிக்கல் இன்ஜி., கற்பகம் உயர்கல்வி அகாடமி, கோவை, கே.எஸ்.சுரேஷ், துறைத் தலைவர், திருவனந்தபுரம் C-DIT, டாக்டர் எம்.வினோத் சரவணன், கதிரியக்க நிபுணர் எம்ஆர்ஐ, திருப்பதி, டாக்டர் எஸ்.மோகனகண்ணன், நரம்பியல் நிபுணர், பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி, கோவை, டாக்டர் வி..மகேஸ்வரன் (கதிரியக்கவியல்), இணைப் பேராசிரியர், பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.எஸ்.தமிழ்செல்வன் நன்றி கூறினார்.