கல்வி கற்கும் வாய்ப்புகள் மற்றும் கலாச்சார உறவுகளைப் பேணுவதற்கான பிரித்தானியாவின் சர்வதேச அமைப்பான ‘பிரிட்டிஷ் கவுன்சில்’ஸ்டெம் (STEM) துறைகளில் பயிலும் பெண்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் உதவித்தொகையின் மூன்றாவது தொகுப்பை அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் STEMமாணாக்கர்களுக்கான 26 ஸ்காலர்ஷிப்கள் மற்றும் பெல்லோஷிப்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவை எந்தவொரு குறிப்பிட்ட நாட்டுக்கும் இத்தனை எண்ணிக்கை என்கிற ஒதுக்கீடு இல்லாமல் தகுதி அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
பிரித்தானியாவில் உள்ள 6 உயர்கல்வி நிறுவனங்களான -கோவென்ட்ரி பல்கலைக்கழகம், பாத் பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பல்கலைக் கழகம், சவுத் ஆம்ப்டன் பல்கலைக்கழகம், இம்பீரியல் காலேஜ் லண்டன் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வழங்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மாணாக்கர்களுக்கு STEM துறைகளில் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தவும், இங்கிலாந்தின் புகழ்பெற்ற STEM துறைகளில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களின் சொந்த நாட்டில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் இந்த ஸ்காலர்ஷிப்கள் உதவும்.
ஸ்காலர்ஷிப் மூலம் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணாக்கர்கள் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் அல்லது முன்கூட்டிய கல்விக்கான ஃபெலோஷிப்பை பெற முடியும்.
2021/22-ம் ஆண்டில், உலகளவில் 115 மாணாக்கர்கள் – 2021 இலையுதிர்கால கல்வி வகுப்புகளில் அவரவர் தேர்ந்தெடுத்த பாடத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்தியப் பெண்கள் 21 பேர், 2022-23ல் உதவித்தொகையைப் பெற்று தற்போது பிரிட்டனில் படித்து வருகின்றனர்.