43 வருட பழமை வாய்ந்த கோத்தகிரியைச் சேர்ந்த செயின்ட் ஜூட்ஸ் பள்ளி பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள் ளது. 1985 முதல் மாணவர்களைப் பொதுத் தேர்வுக்கு அனுப்பி வருகிறது. அன்று முதல் நூறு சதவீத தேர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்துள்ளது.
2023 கல்வி ஆண்டில் ICSE (பத்தாம் வகுப்பு) தேர்வு எழுதிய 122 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டனர். 118 பேர் 75% க்கு மேல் மதிப்பெண்ணும், 4 பேர் 60 % மேல் மதிப்பெண்ணும் பெற்றனர். கே.எஸ்.பிருந்தா (98%), ஜே.கே.கௌரிநாத் (97.4%), எஸ்.சர்வேஷ் (97.2%) முறையே பள்ளியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர்.
ISC (பனிரெண்டாம் வகுப்பு) தேர்வை எழுதிய 88 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர். 81 பேர் 75% க்கு மேல் மதிப்பெண்ணும், 7 பேர் 60 % மேல் மதிப்பெண்ணும் பெற்றனர்.
தமிழ்நாடு மண்டல அளவில் 67 பள்ளிகளில் இருந்து 2623 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். இதில் கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பள்ளியைச் சேர்ந்த வி.பி.அமிதா ஜெய ஜோதி 99 % மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
யுவராஜ் கரூப் (97.25%), கே.அஸ்வின் (96%) பெற்றனர். மாநில அளவில் முதலிடம் பெற்ற அமிதா ஜெயஜோதியை பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.



