fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் விழா: செவிலியர்களுக்கு விருது வழங்கி அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் விழா: செவிலியர்களுக்கு விருது வழங்கி அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவி லியர் தினம் முதல்வர் சிவக்குமார் தலைமையில், உறைவிட மருத்துவர் சைலேஷ் ஜெபமணி, முதன்மை செவிலியர் கண்காணிப்பாளர் ஹெப்சி ஜோதி பாய் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு; சிறப்பாக சேவை செய்த மூத்த செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

மேலும் அமைச்சர் பேசுகை யில் செவிலியர்களின் தியாக மனப்பான்மையையும், கருணை நிறைந்த பணிகளையும் பாராட்டிய அமைச்சர் கீதாஜீவன்; கொரோனா காலகட்டத்தில் நமது செவிலியர்கள் தங்களது குடும்பத்தை மறந்து, உண் ணாமல் உறங்காமல் மிகச் சிறப்பாக பணிசெய்து ஆயிரக்கணக்கான உயிர் களை காப்பாற்றினர்.

கொரோனா காலத்தில் வட இந்திய மாநிலங்களில் நோயாளிகள் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, ஆம்புலன்ஸ் சேவை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், ஆம்புலன்ஸ் சேவை களை விரைந்து உருவாக்கி பல் லாயிரக்கணக்கான உயிர்களை காப் பாற்றினோம்.

சென்னை தான் இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கி வருகிறது என்றார். செவிலியர்கள் தங்களது பணியில் கண்ணும் கருத்துமாக செய லாற்றி வருவது போல தங்களது உடல் நிலையிலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் இந்த சமூகமும் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.
முன்னதாக அரசு செவிலியர்கள் சங்க தலைவர் ஹெப்சி ஜோதி பாய், செவிலியர் கண்காணிப்பாளர் நவமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர், தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க துணைச் செயலாளர் செல்வம் அனைவரையும் வரவேற்றார், செவிலியர் சங்க செயலாளர் உமா மகேஸ்வரி வரவேற்பு கவிதை வாசித் தார்,

நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் பணி உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மருத்துவத் துணை கண்காணிப்பாளர், துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

செவிலியர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகளின் வில்லுப்பாட்டு, பரதநாட்டியம் நடைபெற்றது. நிறைவாக செவிலியர் ஜெலென்ஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img