மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திருநெல்வேலி ஷோரூமில் கலைநயமிக்க வைர நகைகளின் கண்காட்சி, வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் நகைகள் உள்ளன.
கண்காட்சியை பேட்டை கனி மருத்துவமனை டாக்டர் சிந்துஜா, விக்கானி மகளிர் அழகு நிலையம் உமா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
திருநெல்வேலி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளைத் தலைவர் பாசில் கடவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன் பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட’எரா’, பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களின் தொகுப்பான ‘எத்தினிக்’ கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
கடந்த 13-ம் தேதி துவங்கிய இக்கண்காட்சி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 300-க்கும் மேற்பட்டசில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், ராமநாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி ஆகிய நகரங்களில் 22 கிளைகளை கொண்டுள்ளது.



