fbpx
Homeபிற செய்திகள்எஸ்ஆர்எம் பல்கலையில் ‘ஆருஷ் 23’ 90 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

எஸ்ஆர்எம் பல்கலையில் ‘ஆருஷ் 23’ 90 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

எஸ்ஆர்எம் பல்கலை சார்பில் ஆருஷ் 23- தேசிய அளவிலான 4 நாள் தொழில்நுட்ப நடந்தது. மாணவர்கள் தங்களின் அறிவுசார் தொழில்நுட்ப திறமை களை வெளிப்படுத்தி புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டனர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன.

நிகழ்வினையொட்டிய சுவரொட்டிகள், பதாகைகளை எஸ்ஆர்எம். துணைவேந்தர் முனைவர் சி.முத்தமிழ்ச் செல்வன் வெளியிட மாணவர் அமைப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

தொழில்நுட்பத்தை முன் வைத்து நிலைத்தன்மை சார்ந்த கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துதல், அதிநவீன தொழில் நுட்பங்கள் மூலமாக நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற கருப் பொருளை மையமாக வைத்து, எஸ்ஆர்எம் முன்னாள் மாணவர்கள் விவகாரத்துறை, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, கலை அறிவியல் துறை இணைந்து ஏற்பாடு செய்த இத்திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐடிஐக்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரகள், எஸ்.ஆர்எம். கல்விக் குழுமங்களின் மாணவர்கள் என சுமார் 90 ஆயிரம் பேர் பங் கேற்றனர்.

இதில் 100 விதமான தொழில்நுட்ப நிகழ்வுகள், 10 தொழில்நுட்பக் கருத்தரங்குகள், பணிமனைகள், 6 கண்டுபிடிப்பு போட்டிகள் இடம்பெற்றன.

திருவனந்தபுரம் இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவ னத்தின் முன்னணி விஞ்ஞானி முனைவர் விப்பார்த்தி அடிமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார். முன்னாள் மாண வரும், இந்திய கிரிக்கெட் அணி வீரருமான வருண் சக்கரவர்த்தி கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.

டர்போ ட்ரிப்ட் என்ர நைட்ரஜன் கார் வடிவமைப்புப் போட்டியில், மாணவர்கள் பல்வேறு விதமான கார்களை வடிவமைத்து இயக்கி காண்பித்தனர். குவாட் கோப்டர் என்ற ட்ரோன்கள் உருவாக்கும் போட்டியில் மாணவர்கள் ட்ரோன் களை உருவாக்கி விண்ணில் பறக்க விட்டு இயக்கிக் காட்டினர்.

உடல் நலத்தை பிரதிபலிக்க 1.5 கி.மீ. தூர ஜோக்கத்தான என்ற நடை பயணப் போட்டியல் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

பிரபல காமெடி நடிக்ர் சாமி ரெய்னா காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வித்தார்.
ஆர்ட் டிசைன் வடிவமைப்பு கலைஞர் அமித் பட்டேலின் மணல் மற்றும் ஒளி மூலமாக பல்வேறு ஆர்ட் டிசைன்கள் உருவாக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினர் மைசூரில் அமைந்துள் மத்திய ப்ரோட்டின் வேதியியல் தொழில்நுட்பத் துறை தலைமை விஞ்ஞானி கே.ராஜகோபால் ‘பிரதி பலித்தல்’ என்ற தலைப்பிலான ஆண்டு இதழை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்..

எஸ்ஆர்எம் முன்னாள் மாணவரும் கான்சிளோ தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான பிரமோத் மாதவன், எஸ்ஆர்எம் மாணவர்கள் விவகாரத்துறை இயக்குநர் எ.ரத்தினம், மக்கள் தொடர்பு இயக்குநர் ஆர்.நந்தகுமார், உதவி இயக்குநர் ராதா ரவீந்திரன், ஆரூஷ் மாணவர் குழு அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img