fbpx
Homeபிற செய்திகள்கடற்கரை தூய்மைப்பணியில் ஈக்வினிட்டி இந்தியா நிறுவனம்

கடற்கரை தூய்மைப்பணியில் ஈக்வினிட்டி இந்தியா நிறுவனம்

இங்கிலாந்தை சேர்ந்த பங்குதாரர் மேலாண்மை பொருளாதார தொழில்நுட்ப நிறுவனமான ஈக்வினிட்டி இந்தியா, சர்வதேச கடலோரத் தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் பங்கேற்றது.

மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர், கோவளம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய கடற்கரைகளில் இத் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. ஈக்வினிட்டி இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் சுமார் 14,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கடற்கரைகளில் இருந்து 165.5 கிலோ கழிவுகள் சேகரிக்கப்பட்டன.தன்னார்வத் தொண்டர்கள் குப்பை கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங் களில் ஈடுபட்டனர்.

ஈக்வினிட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமகிருஷ்ணன் கூறியதாவது: உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மற்றும் பூமியின் நிலைத்தன்மை போன்றவை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

நமது கிரகத்தை பசுமையாக் குவதற்கு ஈக்வினிட்டி இந்தியா ஒவ்வொரு வகையிலும் பங்களிக்க விரும்புகிறது மற்றும் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் அத்தகைய ஒரு முயற்சியாகும் என்றார்.

ஈக்வினிட்டி இந்தியா தகவல் தொழில்நுட்ப இயக்கு னர் ராமானுஜம் எம்.எஸ் கூறியதாவது: நீர்வாழ் உலகம் மட்டுமல்ல, கடலில் பிளாஸ்டிக்கின் விளைவுகள் மனித வாழ்விலும், உணவு, தண்ணீர் மற்றும் மனித இரத்தத் திலும் கூட மைக்ரோ பிளாஸ்டிக்கின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன என்றார்.

சமூக தாக்கத் தலைவர் ஹபீஸ் கான் கூறும்போது, இந்த கிரகத்தின் இருப்பு கடல்களை சார்ந்துள்ளது. எனவே அதைப் பாதுகாப்பது நமது பொறுப்பு என்றார்.

கடலின் ஒவ்வொரு மைலிலும் 46,000 பிளாஸ்டிக் குப்பை ஆபத்தான நிலையில் இருப்பதாக ஓர் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இது கடல்வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழல் அமைப்புக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

படிக்க வேண்டும்

spot_img