நோயாளிகளின் உடல்நல பராமரிப்பில் செவிலியர்களின் பணி முக்கிய பங்கு வகிப்பதாக செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பரணீ தரன் தெரிவித்தார்.
சென்னை காட்டாங் குளத்தூர் எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவி லான 8-வது செவிலியர் மாநாட்டினை தொடங்கி வைத்தும், மாநாட்டு மலரை வெளியிட்டும் அவர் பேசியதாவது:
நாம் தொழில்நுட்ப உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, இயந்திர அளவிலான கற்றல் போன்றவை கவனத் தை ஈர்த்து உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் ஏராளமான புதிய தொழில் நுட்பங்கள் வந்துள்ளன.
இவை மருத்துவத் துறை முன்னேற்றத்திற்கு உதவும். நோயாளிகளின் உடல்நல பராமரிப்பில் செவிலியர் களின் பணி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே செவிலியர்கள் மருத்துவ தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தினை அறிந்து அதனை செவிலியர் பணியில் கையாள வேண்டும் என்றார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், செவிலியர் மாணவிகள் பங்கேற்றனர்.
செவிலியர் பணியில் திருப்பங்கள், பிரச்சனைகள் மற்றும் சவால்கள்
21-ம் நூற்றாண்டின் உலகமயமாக்கலில் செவிலியர் பணியில் திருப்பங்கள், பிரச்சனைகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டின் தொடக்க விழாவில் மாநாடு அமைப்பாளர், எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரி டீன் டாக்டர் கனியம்மாள் வரவேற்றார்.
எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்ணல் டாக்டர் ஏ. ரவிக்குமார் தலைமை வகித்து பேசும் போது, இப்போது உலகம் குறுகிய வட்டத்திற்குள் வந்துவிட்டது, இதன் மூலம் மருத்துவ பணியில் செவிலியர்கள் பங்கு விரிவடைந்துள்ளது.
திறமை உள்ள, திறன்மிகு செவிலியர்களுக்கு உலக அளவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிலியர் பராமரிப்பு என்பது முக்கியமானது. வளர்ந்து வரும் மருத்துவ வளர்ச்சிக்கு ஏற்ப செவிலியர்கள் தங்களின் அறிவுதிறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.
எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ஏ. சுந்தரம், மருத்துவக் கண்காணிப்பளர் டாக்டர் ஆர். பாலமுருகன், தலைமை செவிலியர் எஸ். கவிதா ஆகியோர் பேசினர்.
மாநாட்டில் பங்கேற்ற செவிலியர்கள் தங்கள் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பேசினர். எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரி துணை முதல்வர் பேராசிரியை ஆர். விஜய லட்சுமி நன்றி கூறினார்.