தமிழ்நாட்டில் முதல்முறை யாக கோவை இந்துஸ்தான் மருத்துவமனையில் இந்தியாவில் தயாரான அறுவை சிகிச்சை ரோபோட் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. உலகின் பிரபலமான ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுதிர் பி ஸ்ரீவத்ஸவாவின் குழந்தையாக எஸ்எஸ்ஐ மந்த்ரா உருவாகியுள்ளது.
இந்தியாவில் புதிய வகை அறுவை சிகிச்சை முறையை ஏற்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. எஸ்எஸ்ஐ மந்த்ரா, விலையில் மலிவானது. சர்வதேச விலையை ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்கு விலை தான் இது.
இந்த ரோபோட், சிறுநீர் பை புற்றுநோய், மகப்பேறு தொடர்பான புற்றுநோய், இரைப்பை குடல் புற்றுநோய், இருதய நோய் அறுவை சிகிச்சை களை சிறப்பாக மேற்கொள்ள உதவும்.
இந்த அமைப்பு புதுடில்லியில் உள்ள ராஜிவ் காந்தி புற்றுநோய் நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள சஞ்சீவினி மருத்துவமனை, ரெய்ப்புரில் உள்ள சிபிசிசி யுஎஸ்ஏ புற்றுநோய் மருத்துவமனை ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இதுவரை 70க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.
இதன் துவக்க விழாவில், இஸ்ரோ முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணா துரை பேசுகையில், இந்த இயந் திர அறுவை சிகிச்சையால், மருத்துவ செலவு குறைகிறது.
இது, இந்தியாவில் மருத்துவ சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் என்றார். இந்துஸ்தான் மருத்துவமனையின் ரோபோட்டிக் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் மாணிக்கம் ராமலிங்கம் பேசுகையில், சமுதாயத்தில் உள்ள எளிய மக்களுக்கு பேருதவியாகவும், தரமான சிகிச்சை பெறவும் வாய்ப்பாக இருக்கும் என்றார்.
எஸ்எஸ் இன்னோவேஷன்ஸ்
எஸ்எஸ் இன்னோவேஷன்ஸ் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மற்றும் ரோபோ டாக்டர் சுதிர் ஸ்ரீவத்ஸா பேசுகையில், கோவை இந்துஸ்தான் மருத்துவமனையில் இந்தியாவில் தயாரான ரோபோட் நிறுவியதால், தமிழ்நாட்டின் மருத்துவத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் முதல் முயற்சியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு தரத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் மருத்துவ உயர்தொழில்நுட்பத்தால், 60% அளவிற்கு மருத்துவ கட்டணத்தை பெற முடியும் என்றார்.
ராஜிவ் காந்தி கேன்சர் இன்ஸ்டியுட் மருத்துவ இயக்குநர் டாக்டர் சுதிர் அகர்வால் பேசுகையில், மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற் கொள்ள பேருதவியாக இருப்பதோடு, திறம்பட செயல்படுகிறது. தரத்தாலும், மலிவாலும் இந்த தொழில்நுட்பம் இந்தியாவிலும், உலக அளவிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.