சென்னையில் இயங்கிவரும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை பலப்படுத்துவது பற்றிய பயிற்சி முகாமை, காட்டாங்கு ளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடத்தியது.
இதில் ஆசிய, ஆப்ரிக்கா கண்டங்களின் அஜர்பைஜேன், வங்காளதேசம், பூட்டான், கேமரூன், எரிட்ரீயா, எதியோபியா, கென்யா, எஸ்வட்னி கிங்டம், மாலத்தீவு, மொரக்கோ, நமீபியா, சூடான், தஜகிஸ் தான், தான்சானியா, வியட்னாம், ஜாம்பியா, உஸ்பெகிஸ்தான், நைஜீரியா ஆகிய 19 நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களின் கல்வியாளர்கள், நிபுணர்கள்,ஆராய்ச்சியாளர்கள் என 22 பேர் பங்கேற்றனர்.
இவர்கள் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் பயிற்சி முகாமில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டு கல்வியாளர்களை வரவேற்ற எஸ்ஆர்எம் தர உறுதி பிரிவு டீன் பேராசிரியர் அகஸ்டின் பாண்டியன், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொறியியல், மருத்துவம், மேலாண்மை,சட்டம், கலை அறிவியல் கல்வி மற்றும் வேளாண்மை கல்வி உள்ளிட்டவை உலக தரத்தில் வழங்கப்பட்டு வருவதுடன் அதற்கான அடிப்படை வசதிகள் ஏராளமாக உள்ளன. வெளிநாட்டு கல்வியாளர்கள் அவற்றை காணவேண்டும் என்றார்.
இரட்டை பட்டங்கள்
எஸ்ஆர்எம்-ல் இரட்டை பட்ட படிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் இரண்டு ஆண்டுகள் எஸ்ஆர்எம்-லும்,இன்னொரு இரண்டு ஆண்டுகள் அயல் நாட்டு பல்கலைக் கழகத்திலும் பயில்வதின் மூலம் இரட்டை பட்டங்கள் அளிக்கப்படும் என்று எஸ்ஆர்எம் சர்வதேச தொடர்பு இயக்குநர் பேராசிரியர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்தார்.
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சர்வதேச விவகார பிரிவின் தலைமை அலுவலர் பேராசிரியர் ஜி. குழந்தைவேலு இதுபோன்ற சர்வதேச அளவிலான பயிற்சி முகாம் நடத்த எஸ்ஆர்எம் நிறுவனத்தில் அதற்கான அடிப்படை வசதிகள், ஆராய்ச்சி வசதிகள், திறமையான பேராசிரியர்கள் உள்ளதை, கல்வியாளர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.
சூடான் பல்கலைக்கழக மனித வளத்துறை பேராசிரியர் எமானே ஜெப்ரமேஸ்கல் டெகளே கல்வி பரிவர்த்தனை, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் கொண்ட கல்வி நிறுவனமாக எஸ்ஆர்எம் விளங்கிவருவது சிறப்புக்குரியது என்றார்.
வங்காளதேசம் கல்வி அமைச்சகத்தின் முகமது ஜகாங்கிர், அஜர்பைஜேன் நாட்டின் பரித் அபிலோவ், எஸ்ஆர்எம் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநர் முனைவர் டி. வி. கோபால், சர்வதேச தொடர்பு உதவி இயக்குநர் பேராசிரியை கயல்விழி ஜெயவேல் ஆகியோர் பேசினர்.