fbpx
Homeபிற செய்திகள்மருத்துவமனைகளில் நோய் தொற்று பரவாமல் கழிவுப் பொருட்களை மேம்படுத்த பயிற்சி திட்டம்

மருத்துவமனைகளில் நோய் தொற்று பரவாமல் கழிவுப் பொருட்களை மேம்படுத்த பயிற்சி திட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் தேசிய உற்பத்தி திறன் கவுன்சில் மற்றும் தொழில் வர்த்தக சபை இணைந்து மருத்துவமனைகளில் நோய் தொற்று பராமல் கழிவுப் பொருட்களை மேம்படுத்துவது குறித்த பயிற்சி திட்ட துவக்க விழா நடைபெற்றது.
வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமு வரவேற்றார்

தேசிய உற்பத்தி குழு கவுன்சில் பொது இயக்குநர் சந்தீப் குமார் நாயக் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசும்போது, தேசிய உற்பத்தி குழு கவுன்சிலிங் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவையில் உள்ள 10 மருத்துவமனைகளில் ஏற்படும் கழிவுகள் அதன் மூலம் ஏற்படும் தொற்று நோய், அவற்றை பரவாமல் பாதுகாப்பது, மருத்துவமனைக்கு சிகிச்சை வரும் நோயாளிகள் நோயாளிகளோடு வரும் உறவினர்கள் பாதுகாப்பாக இருக்க இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசியஉற்பத்தி குழு

இந்தியாவில் முதல் பயிற்சி திட்டத்தை இந்திய தொழில் வர்த்தக சபையோடு ஏற்படுத்தி உள்ளோம் என்று தேசியஉற்பத்தி குழு மையத்தின் பொது இயக்குநர் சந்திப் குமார் நாயக் பேசினார்.

சிறப்பு விருந்தினர் எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும்போது, கோவைக்கு இது போன்ற திட்டங்கள் அவசியம் தேவை. இவற்றை கருத்தில் கொண்டு தேசிய உற்பத்தி குழு இந்திய தொழில் வர்த்தக சபையை தேர்ந்தெடுத்து தேவையான நிதி உதவிகளை செய்ய முன்வந்துள்ளது.

நகரில் உள்ள முன்னணி பத்து மருத்துவமனைகள் ஊழியர்கள் அலுவலர்கள் இந்த பயிற்சியை பெற்று பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவையை அளிக்க வேண்டும் என்றார்.

இந்திய தொழில் வர்த்தக சபையின் உப தலைவர் துரைராஜ், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். வர்த்தக சபை செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.

தொற்றுநோய் தடுப்பு வல் லுனர்களால். கோவையில் உள்ள முன்னணி பத்து மருத்துவமனைகளில் பணியாற்றும் தலா இரண்டு நர்சுகள் விதம் 20 பேருக்கு இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முடிந்ததும் சான்றுகள் வழங்கப் படும்.

படிக்க வேண்டும்

spot_img