fbpx
Homeபிற செய்திகள்திறமைப் போட்டியில் கோவை சைதன்யா பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தல்

திறமைப் போட்டியில் கோவை சைதன்யா பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தல்

ஐஎன்டிஎஸ்ஓ எனும் (INTSO) இந்திய தேசிய திறமை தேடல் ஒலிம்பியாட் முதல் நிலை தேர்வில் கோவை மண்டல ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவ,மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பள்ளி ,மாணவ,மாணவிகளின் கணிதம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட திறன்களை ஊக்குவிக்கும் விதமாக அகில இந்திய அளவில், ஐ என்டிஎஸ்ஓ எனும் இந்திய தேசிய திறமை தேடல் ஒலிம்பியாட் முதல் நிலை தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில்,தேசிய அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளி இரண்டாம் தரத்திலான இடத்தை பிடித்துள்ளது.

அதே போல கோவை மண்டலத்திற்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி, நீலாம்பூர், காந்திபுரம், இடிகரை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த
சைதன்யா பள்ளி மாணவர்கள் சிறப்பு பரிசுகளாக மடிக்கணிணி மற்றும் டேப் (தாவல்) பெற்று சாதனை பெற்றுள்ளனர்.

இந்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீசைதன்யா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் நிறுவனர் டாக்டர் பி.எஸ்.ராவ், மற்றும் டாக்டர். ஜான்சி லட்சுமி பாய் அறிவுரையின் பேரில் நடைபெற்ற இதில்,பள்ளியின் மேலாளர் நாகேந்திர், பொது மேலாளர் ஹரிபாபு, துணை மேலாளர் நாகேஸ்வரராவ், மண்டல பொறுப்பாளர் பாலகிருஷ்ண நல்லி சின்னவேடம்பட்டி ஸ்ரீ சைதன்யா பள்ளி முதல்வர் டாக்டர் கிளாடிஸ் டயானா, மாநில கல்வி பொறுப்பாளர் துர்க பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சான்றிதழ் மற்றும் பரிசுகள்

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இதில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் ஜோகித் ஜோபி மடிக்கணிணியும் ,ஹர்சிகா, ஸ்ரீபிரணவ் ,ஜீவேஷ்,சஞ்சித்,சவுரஜ் சாய் கோவிந்த் ஆகியோர் டேப்(தாவல்) பரிசாக பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீசைதன்யா பள்ளிகளின் முதல்வர்கள் அகஸ்டின்,ஸ்வாதி ரெட்டி, அனிதா, காவ்யா, மண்டல ஒருங்கிணைப்பாளர் சுஜித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img