fbpx
Homeபிற செய்திகள்ஆலயா அகாடமி பள்ளி ஆண்டுவிழா: கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார்

ஆலயா அகாடமி பள்ளி ஆண்டுவிழா: கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார்

திருப்பூர் கூலிபாளையம் நால் ரோடு அருகே இருக்கும் ஆலயா அகடாமி பள்ளியில் எட்டாம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடை பெற்றது. இதில்
கொங்கு பாரம்பரியமான சலங்கை ஆட்டம் குழந்தைகளின் அவர்கள் திறமைக்கேற்ப நடனப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், தமிழ் நாடகம், விசைப்பலகை வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கல் வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு விருது வழங்கினார். தாளாளர் சந்திரகுமார் ,முதல்வர் மோகனா ,நிர்வாக இயக்குனர் அஜய் அரவிந்த், உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

பணிகள்

மேலும் இந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இந்த பள்ளியில் நிறுவனர் மற்றும் மண்ணரை முன்னாள் ஊர் பஞ்சாயத்து தலைவர் ஏ.சுப்புராயன் செய்த மக்கள் பணிகளை பற்றி எடுத் துரைத்தார். இந்த விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img