Homeபிற செய்திகள்ஸ்ரீவிநாயகா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ஸ்ரீவிநாயகா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

காரமடை அடுத்துள்ள புஜங்கனூரில் ஸ்ரீவிநாயகா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளி நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

பள்ளியளவில் பன்னிரண்டாம் வகுப்பில் பிரணவ் சந்தர் 470 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், கவின் 460 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், ஜெஃப்ரி டேனியல் 454 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹரிஹரன் 481 மதிப் பெண்கள் பெற்று முத லிடமும், பிரகதீஷ் குமார் 479 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், அக்சயா 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளி யளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடை பெற்றது.

இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் சோமசுந்தரம், நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி, முதல்வர் சர்லின் உள் ளிட்டோர் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.
இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித் தனர்.

படிக்க வேண்டும்

spot_img