ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை யியல் துறைகளின் சார்பில், ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் வலிமையை அறிதல் மற்றும் பயன்படுத்துதல்’ ,என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
வணிகவியல் துறைத்தலை வர் முனைவர் டி.பத்மாவதி வரவேற்றார்.
மாநாட்டின் சிறப்பம் சத்தைக் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா விளக்கி னார்.
கோவை ஐஎக்ஸ்எல்ஒய் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சைலேஷ் குமார் “அடுத்த தலைமுறை டிஜிட் டல் மார்கெட்டராக மாறுவதற்குத் தேவையான திறன்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ப்ளைவீல் மார்க்கெட்டிங்
ஹேப்பி வேலி வணிகவியல் கல்லூரி இயக்குநர் டாக்டர் டி.பினா ‘ப்ளைவீல் மார்க்கெட்டிங்கிற்கான டிஜிட்டல் கருவிகளை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மலேசியாவின் டெய்லர் பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத்துறைக் கல்லூரி மூத்த பேராசிரியர் டாக்டர் கீ வெய்சியா வீடியோ கான்பரன்சிங் முறையில் ‘சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் மாற்றம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கருத்தரங்கம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வழங்கினர். அவற்றுள் சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வணிகவியல் இணைப் பேராசிரியை டாக்டர் ஐ.கார்த்திகா நன்றி கூறினார்.