ஸ்கூட்டர் வகையை மறுவரையறை செய்து, ஸ்கூட்டர் பிரிவில் அதன் தொழில்நுட்பம் சார்ந்த பயணத்தின் அடுத்த கட்டத்தை எட்டிடும் வகையில், உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், இன்று Xoom என்னும் ஒரு புதிய 110cc ஸ்கூட்டரை, கோவையில் அறிமுகம் செய்துள்ளது.
தினசரி பயணத்தில் சாகச உணர்வையும் மற்றும் குதூகலத்தையும் எதிர்நோக்கும் தற்போதைய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள Xoom ஸ்கூட்டர், சமகால வடிவமைப்பு, சிறந்த கையாளுதல்திறன், ஈடு இணையற்ற ஆற்றல் மற்றும் அசாதாரண செயல்திறன் ஆகியவற்றை வழங்குகின்றன.
ஹீரோ Xoom 110cc பிரிவில் புதிய தோற்றத்தை உள்ளடக்கியது. தொழில்துறையில் முதல் முறையாக – ஹீரோ கார்னர் பென்டிங் லைட், மற்றும் வகையினத்தில் முதல் அம்சமாக பெரிய மற்றும் அகலமான டயர்கள் மற்றும் 110cc பிரிவில் துடிப்பான முடுக்கம் ஆகியவை உரிமையாளர்களுக்கு இணையற்ற இயக்க அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
ஹீரோ இண்டலிஜெண்ட் கார்னரிங் லைட்TM 110cc பிரிவில் ஹீரோ Xoom உடன் அறிமுகமாகிறது. இது, வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது. திரும்பும்போது அல்லது ஒரு வளைவில் பயணிக்கும்போது இருண்ட மூலையில் உள்ள பகுதிகளில் பிரகாசமான, தெளிவான ஒளியுடன் HiCL ஒளிரச் செய்யும்.
சாலையில் உள்ள மூலைகளின் வெளிச்சம் கிடைப்பது பயணத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனால் இரவில் பாதுகாப்பான சவாரி உறுதி செய்யப்படுகிறது.
Xoom ஆனது ஹீரோ மோட்டோகார்ப்பின் புரட்சிகர i3S தொழில்நுட்பத்தை (ஐடில் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம்) கொண்டிருக்கும் சக்திவாய்ந்தBS-VIக்கு இணக்கமான எஞ்சினுடன் வருகிறது.
புளூடூத் இணைப்புடன் கூடிய புதிய டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் சைட்-ஸ்டாண்ட் இன்ஜின்-கட்-ஆஃப் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப அம்சத்தை மேம்படுத்துகிறது.
ஷீட் டிரம், காஸ்ட் டிரம், காஸ்ட் டிஸ்க் ஆகிய மூன்று வகைகளில் வெளியிடப்பட்டுள்ள ஹீரோ XOOM ஸ்கூட்டர் நாடு முழுவதும் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் டீலர்ஷிப்களில் அறிமுக விலையில் கிடைக்கிறது. ரூ.74,399 (LX -ஷீட் டிரம்), ரூ.77,599 (VX – கேஸ்ட் டிரம்), ரூ.82,499 (ZX – கேஸ்ட் டிரம்).