fbpx
Homeபிற செய்திகள்கோவையில் வாத்தி படம் வெளியானது: தனுஷ் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கோவையில் வாத்தி படம் வெளியானது: தனுஷ் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தெலுங்கு பட இளம் இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து பாடல்கள் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில்,.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது. தங்கள் அபிமான நடிகர் நடித்த படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக அதிகாலை முதலே தியேட்டர்களில் ரசிகர்கள் கூடினர். கோவை துடியலூர் பகுதியில் முருகன் சினிமாஸ் தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம்

இதனை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் கௌரவத் தலைவர் மணி, மாவட்ட தலைவர் சங்கர், செயலாளர் அருள்முருகன், பொருளாளர் அந்தோணி, அமைப்பாளர் வினோத்குமார், மற்றும் நிர்வாகிகள் ராஜ்குமார் பழனிக்குமார், சங்கர் ஆனந்த், கிங் ராஜேஷ், சம்பத், மணிகண்டன், சித்திரை குமார், மணி ராஜேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img