fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராம கிருஷ்ணா மகளிர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராம கிருஷ்ணா மகளிர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் சென்னையைச் சேர்ந்த எல் அண்ட் டி எஜுடெக் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி மற்றும் எல் அண்ட் டி எஜுடேக் நிறுவனத்தின் காலேஜ் கனெக்ட் துறைத்தலைவர் பெபின் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

இந்த ஒப்பந்தத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லோனிங் போன்ற துறைகளில் மாணவிகளுக்குத் தேவையான வேலைவாய்ப்புப் பயிற்சிகளைப் பாடத்திட்டத்திலேயே இணைத்துக் கற்றுத் தரமுடியும் என்று கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழில்நுட்பத்துறையின் அண்மைக்காலத் திறன்களையும் அறிவையும் மாணவிகள் கற்றுக்கொள்ள உதவும் வகையில் பயிற்சியளித்து வேலைவாய்ப்புக்கு தகுதி மிக்கவர்களாக உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img