கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.கற்பகம் கிருஷ்ண வழிபாட்டினை யும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியினையும் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் கிருஷ்ணன், ராதை போல் வேடம் அணிந்து அணிவகுப்பு நடத்தினர்.
அதில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கிருஷ்ணர் பஜ் னையும் நடைபெற்றது.
இவ்விழாவில் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இந்நிகழ்வினைத் மியூசிக் & ட்ராமா கிளப், ஸ்டுடென்ட் கவுன்சில்லிங்- ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மீடியா டீம் ஏ ற்பாடு செய்திருந்தனர்.