கோயமுத்தூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே ஸ்கூல்ஸ் அசோசியேஷன் சார்பில் 5வது கோவை மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப் – 2025 போட்டிகள், சின்னவேடன்பட்டி, கௌமாரமடாலயம் குமரகுருபர கலையரங்கத்தில் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் சென் கராத்தே ஸ்கூல் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த கார்த்திகேயன், தர்ஷன் ஆகியோரின் தலைமையில் பலர் உற்சாகமாக பங்கேற்று, சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். இதில் திரளான வீரர் கள், வீராங்கனைகள் பங்கேற்று அசத் தினர். போட்டியை கோவை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்.சரவணன் மற்றும் கௌமார மடாலய நிர்வாக மேலாளர் எம்.ராமானந்தம் ஆகியோர் தீபம் ஏற்றி துவக்கி வைத்தனர்.
டி.கே.எஸ். கல்வி நிறுவனத்தின் உடற்கல்வி இயக்குனர் எஸ்.தினேஷ் துவக்க விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
ஆசியன் பாரா த்ரோபால் ஃபெடரேஷன் துணைத் தலைவர் சந்தோஷ் ராஜேஷ், பாரா த்ரோபால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனர்- தலைவர் டாக்டர் வி.ஆல்பர்ட் பிரேம்குமார் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு, அடிப்படை நிலை முதலே கராத்தே விளையாட்டை ஊக்குவித்து வரும் அமைப்பினரை பாராட்டினர்.
கே.ஐ.ஓ. அமைப்பின் ஒழுங்கு முறை குழு தலைவர் எஸ்.சாய் புரூஸ் போட்டியின் பல்வேறு கட்டங் களை மேற்பார்வை செய்தார். சிறப்பு விருந்தினர்களாக அக்யுபஞ்சர் மற்றும் வர்ம மருத்துவ நிபுணர் டாக் டர் எஸ்.பி.சந்திரசேகரன் மற்றும் சத்ஸ்வயம் நிறுவனத்தின் டாக்டர் ஆர். ரங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே ஸ்கூல்ஸ் அசோசியேஷன் சேர்மன் பி.கே.கதிரேசன், தலைவர் என்.கார்த்திகேயன், செயலாளர் ஏ.ராஜா என்கிற செல்வராஜ், பொருளாளர் ஜி.முத்து சரவணன் உள்ளிட்டோர், சென் கராத்தே ஸ்கூல் ஆஃப் இந்தியா குழுவின் ஒத்துழைப்புடன், போட்டியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
இந்த ஆண்டுக்கு சாதனை எண் ணிக்கையில் போட்டியாளர்கள் அதிகளவில் பங்கேற்றதாக அமைப்பி னர் தெரிவித்தனர். ஒழுக்கம், விளை யாட்டு மனப்பாங்கு, திறமையான விளையாட்டை பிரதிபலிப்பதாக இவ்வாண்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுள்ளதாக பெற்றோரும் ரசிகர்களும் தெரிவித்தனர்.



