
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் லவ் நெஸ்ட் டிரஸ்ட் அறக்கட்டளை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை கோவை ராமகிருஷ்ணா வித்யாலயத்தில் நடத்தின.




இதில் 350-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜி.வசந்தராம்குமார் தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் லவ் நெஸ்ட் டிரஸ்ட் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரம்யா முத்துகுமார் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.



