கடந்த 2019 ஆம் ஆண்டு செயின்ட். ஜூட்ஸ் பப்ளிக் ஸ்கூலின் இயக்குநரான டாக்டர் சாம்ஜித் தனராஜனால் துவங்கப்பட்ட ஜே.டி எஜுகேஷன் – ட்ரைனிங் நிறுவனம், அகாடமிக் கல்வி மற்றும் தொழில்துறை இடையேயான இடைவெளியை நீக்கும் நோக்கில் செயல்படும் எதிர்காலத்தை நோக்கி உரு வாக்கப்பட்ட மீடியா கல்வி நிறுவ னமாகும். இதுவரை கோவை நகரில் உள்ள ஜே.டி எஜுகேஷன் – ட்ரைனிங் நிறுவனத்தின் 3 மையங்களில் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
ஜே.டி எஜுகேஷன் – ட்ரைனிங் நிறுவனம் தற்போது, பிரான்ஸின் புகழ்பெற்ற டிபிஐம்ஏ பாரிஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இதன் மூலம் இன்டர் நேஷனல் டிப்ளமோ இன் டிஜிட்டல் பிலிம்மேக்கிங் அண்ட் வி.எஃப்.எக்ஸ் எனும் புதிய பன்னாட்டு டிப்ளமோ பயிற்சியை துவங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் டிப்ளமோ பயிற்சியை சிறப்பு விருந் தினராக பங்கேற்ற பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர். போன்ற திரைப்படங்களின் மூத்த வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் பீட் ட்ரேப்பர் துவக்கி வைத்தார்.
மாணவர்கள் மத்தியில் பேசிய பீட் ட்ரேப்பர், தான் பணியாற்றிய திரைப்படங்கள் குறித்த அனுபவங்களை விளக்க படங்களுடன் எடுத்துரைத்தார். மேலும், நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவற்றை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்பவை என்றும் எனவே அதன் வரலாறு பற்றி முழுவதுமாக புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில், டிஎன்இஜி நிறுவனத்தின் வி.எஃப்.எக்ஸ் துறைத் தலைவர் கார்த்திகேயன், உலக வடிவமைப்பு கவுன்சிலின் இந்தியத் தலைவர் மற்றும் அகாடெமி ஆஃப் மீடியா அண்ட் டிசைன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பிலிப் தாமஸ், டிபிஐம்ஏ இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) பேராசிரியர் ஜேசுராஜா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பொன்னுசாமி கௌரவ அழைப்பாளர் ஆக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், டிபிஐம்ஏ இயக் குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஜான் பால் சுவாமிநாதன் மற்றும் அவரது குழுவினர் பாரிஸ் நகரத்திலிருந்து நேரலையில் மாணவர்கள் எதிர்பார்க்கக்கூடிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இரண்டு நிலை கொண்ட இந்த ஒரு வருட தொழில்முனைவு டிப்ளமா பயிற்சி, 8 மாதங்கள் இந்தியாவில் ஆழ்ந்த பயிற்சியும், 2026 பிப்ரவரி மாதத்தில் 1 மாதம் பாரிஸில் முழுநேர வாசிப்புடன் கூடிய பயிற்சியும் வழங்குகிறது.
இது மாணவர்களுக்கு உலகளாவிய அனுபவங்களையும் நடைமுறை திறன்களையும் வழங் குகிறது. இந்த பயிற்சிக்கான பாடத் திட்டத்தில், மீடியா மேலாண்மை, எடிட்டிங், மோஷன் கிராபிக்ஸ், சவுண்ட் டிசைன், கலர் கிரேடிங், ஃபினிஷிங் என அனைத்தும், அடோப் பிரீமியர் ப்ரோ, ஆஃப்டர் எஃபெக்ட்ஸ், போட்டோஷாப், ஆடிஷன், டாவின்சி ரிசால்வ் போன்ற தொழில்துறை கருவிகளுடன் கற்பிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் இணைய குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், யூஜி அல்லது பிஜி முடித்திருந்தால் மேன்மையானது.
ஆகஸ்ட் மாதம் தொடங்கும் இந்த பயிற்சிக்கான விண்ணப்பம் ஜூலை 15-ம் தேதியோடு முடிவடைகிறது. மேலும், 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த டிப்ளமாவை முடித்த பிறகு, டிபிஐம்ஏ பாரிஸ் -இல் யூஜி இரண்டாம் ஆண்டில் நேரடி யாக சேரலாம். யூஜி முடித்த மாணவர்கள், இந்த டிப்ளமாவை முடித்த பிறகு, பிஜி இரண்டாம் ஆண்டில் சேர வாய்ப்பு உள்ளது.
இந்நிகழ்வின்போது செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த வி.எஃப்.எக்ஸ் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் வாய்ந் தவரும் டிஎன்இஜி நிறு வன வி.எஃப்.எக்ஸ் துறைத் தலை வருமான கார்த்திகேயன் கூறுகையில், “இந்த டிப்ளமோ பயிற்சி மாணவர்களுக்கு மிக வும் உதவிகரமாக இருக்கும் என்று நினைப்பதாக கூறினார்.
டிஜிட்டல் பிலிம்மேக்கிங்க்கான தேவை தற்போதைய கால கட்டத்தில் அதிகரித்து வருவ தாகவும் வி.எஃப்.எக்ஸ்-க்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருவதாகவும் கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.



