Homeபிற செய்திகள்சென்னையில் இருந்து போத்தனூர், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்

சென்னையில் இருந்து போத்தனூர், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்

தீபாவளி பண்டி கையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னையில் இருந்து போத்தனூர், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட் டிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து வருகிற நவம்பர் 6-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்&போத்தனூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06023) அடுத்த நாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் 9-ந்தேதி போத்தனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் போத்தனூர்&சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (06024) அடுத்த நாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
இந்த ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம். ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங் களில் நின்று செல்லும்.

அதேபோல, தாம்பரத் தில் இருந்து நவம்பர் 6-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் தாம்பரம்&நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06153) அடுத்த நாள் மாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் மறுமார்க் கத்தில் நாகர்கோவிலில் இருந்து 9-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்&தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (06154) அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு தாம்பரம் வந்த டையும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி. மயிலாடுதுறை, கும்ப கோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல். மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல் வேலி, வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த பண்டிகை கால சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (29ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img