Homeபிற செய்திகள்கோவை லூலூவில் தீபாவளித் திருவிழா ஆரம்பம் - 50 சதவீத தள்ளுபடி விற்பனை

கோவை லூலூவில் தீபாவளித் திருவிழா ஆரம்பம் – 50 சதவீத தள்ளுபடி விற்பனை

கோவை மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் போற்றும் வகையில், இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்க ‘பிளாட் 50% பிரம்மாண்ட தள்ளுபடி விற்பனையை லூலூ ஹைப்பர் மார்க்கெட் நாளை (29ம் தேதி) தொடங்குகிறது.

இந்த அதிரடிச் சலுகை அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை நான்கு நாட்களுக்கு மட்டுமே என்றும் தினமும் நள்ளிரவு 1 மணி வரை விற்பனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீபாவளிச் சலுகையில், லூலூ ஹைப்பர் மார்க்கெட்டின் தினசரித் தேவையான மளிகைப் பொருட்கள், வீட்டு அத்தியாவசியப் பொருட்கள், மற்றும் லூலூ கனெக்ட் (LuLu Connect) பிரிவில் உள்ள அனைத்து முன்னணி பிராண்டுகளின் மொபைல் போன்கள், எல்இடி டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு பொருட்களும் பாதி விலையில் (50% தள்ளுபடி) விற்கப்படுகிறது.
மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காகச் சிறப்பு கேஷ்பேக் ஆஃபர்கள், சுலபமான இஎம்ஐ வசதிகள் மற்றும் லூலூ கனெக்ட் பிரிவில் வாங்கும் விட்டு உபயோகப் பொருட்களுக்கு இலவச டோர் டெலிவரி போன்ற கூடுதல் நன்மைகளும் அளிக்கப்படுகின்றன.

அத்துடன், பண்டிகையைக் குதூகலமாக்க சுவையான இனிப்பு மற்றும் கார வகைகள் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பிரத்யேக தீபாவளி ஆடைகள் அனைத்தும் மிகக் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு மட்டும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img